Saturday, March 3, 2012

ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது இன்றைய சிறப்பு வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தையின் இன்றைய சிறப்பு வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது. வர்த்தக நேரம் முடிவின் ‌போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.52 புள்ளிகள் குறைந்து 17622.28 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.05 புள்ளிகள் அதிகரித்து 5359.40 புள்ளிகளோடு காணப் பட்டது. இன்போசிஸ், ஐடிசி, ஐசிஐசிஐ, ஹச்டிஎஃப்சி மற்றும் டிசிஎஸ் ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.

திருகோணமலையில் ஆறு நெற்களஞ்சியசாலைகள்



திருகோணமலை மாவட்டத்தில் ஆறு நெற்களஞ்சியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

19.9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த களஞ்சியசாலைகளில், கந்தளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இருந்து கொள்வனவு செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட 80 வீடுகளைக் கொண்ட நெல்சன்புர வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்ற

இன்றைய சிறப்பு வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கியது



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் ஐந்து நாட்கள் மட்டும் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று சனிக்கிழமை சிறப்பு வர்த்தகம் நடைபெறுகிறது. இன்று வர்த்தக நேர துவங்கிய 10 நிமிடங்களிலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34.60 புள்ளிகள் அதிகரித்து 17671 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 4.55 புள்ளிகள் அதிகரித்து 5363.90 புள்ளிகளோடு காணப் பட்டது. முதல் 10 நிமிடங்களிலேயே பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் காணப்பட்டது பங்கு முதலீட்டாளர்களிடையே உச்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"சென்செக்ஸ்" 53 புள்ளிகள் அதிகரிப்பு



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.குறிப்பாக, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்ற செய்தியால், அந்நாட்டிலும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளின், நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, இந்நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் வழங்கியதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, ஆரோக்ய பராமரிப்பு, பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 52.83 புள்ளிகள் அதிகரித்து, 17,636.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,731.88 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,504.38 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 19.60 புள்ளிகள் உயர்ந்து, 5,359.35 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,392.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,315.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Friday, March 2, 2012

ஏற்றத்துடன் முடிநதது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் அதிகளவில் காணப்பட்டன. வர்த்தக முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32.40 புள்ளிகள் அதிகரித்து 17616.37 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.35 புள்ளிகள் அதிகரித்து 5354.10 புள்ளிகளோடு காணப் பட்டது. ரிலையன்ஸ் இண்டர்டீஸ், லார்சன், ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஹச்டிஎஃப்சி, மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல், என்டிபிசி, டாடா ஸ்டீல் மற்றும் விப்ரோ ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. 

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.15 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43.61 புள்ளிகள் அதிகரித்து 17627.58 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.45 புள்ளிகள் அதிகரித்து 5348.20 புள்ளிகளோடு காணப் பட்டது. ஏற்றத்தில் காணப்பட்ட வர்த்தகம் சிறிது நேரத்தி‌லேயே சரிந்து காணப்பட்டது. 9.29 மணியளவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 44.53 புள்ளிகள் குறைந்து 17535.03 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.60 புள்ளிகள் குறைந்து 5325.15 

மசகு எண்ணெய்க்கான கொடுப்பனவுகளைத் தங்கமாகப் பெற்றுக்கொள்ள ஈரான் இணக்கம்



மசகு எண்ணெய்கான கொடுப்பனவுகளை தங்கமாகப் பெற்றுக்கொள்ள ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளது.

அணுத்திட்ட சர்ச்சை காரணமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஈரான் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு எதிராகத் தடைகளை விதித்துள்ளன.

இதன்காரணமாக கொள்வனவு செய்யும் மசகு எண்ணெய்கான கொடுப்பனவுகளை ஈரான் வங்கிகளுக்கு செலுத்துவதில் வாடிக்கையாளர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

தடைகளின் ஒரு கட்டமாக ஈரான் எண்ணெய் கொள்வனவை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிறுத்தவுள்ளன.

ஈரானின் 20 வீதமான மசகு எண்ணெய் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

எனினும், ஈரானின் மசகு எண்ணெய்யை பாரியளவில் கொள்வனவு செய்யும் சீனா, மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தாம் தொடர்ந்தும் எண்ணெய் இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ள

"சென்செக்ஸ்" 169 புள்ளிகள் வீழ்ச்சி



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக்கிழமை அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. உலகின் ஒரு சில பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், விமான சேவை, வங்கி, பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகனம், உரம் உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 168.71 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,583.97 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,717.53 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,463.27 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 45.45 புள்ளிகள் குறைந்து, 5,339.75 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,372.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,297.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Thursday, March 1, 2012

169 புள்ளிகள் சரிவில் முடிந்தது சென்செக்ஸ்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கிய சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 168.71 புள்ளிகள் குறைந்து 17583.97 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 45.45 புள்ளிகள் குறைந்து 5339.75 புள்ளிகளோடு காணப் பட்டது. கபிடல் குட்ஸ், வங்கி, எண்ணெய், காஸ், ஆட்டோ மற்றும் மெட்டல் ஆகி‌யவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன.

சரிவுடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.13 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51.56 புள்ளிகள் குறைந்து 17752.68 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.70 புள்ளிகள் குறைந்து 5385.20 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 20 காசுகள் குறைந்து 49.21 ஆக இருந்தது.

"சென்செக்ஸ்" 22 புள்ளிகள் உயர்வு "சென்செக்ஸ்' 22 புள்ளிகள் உயர்வு



மும்பை நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது என்ற செய்தியால், 18,000 புள்ளிகளை கடந்து ஏற்றத்தில் சென்று கொண்டிருந்த பங்கு வர்த்தகம், மதியத்திற்கு பிறகு 250 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. இருப்பினும், வர்த்தகம் முடியும் போது, ஓர் அளவிற்கு முன்னேற்றம் கண்டது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், வங்கி, நுகர் பொருள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. அதேசமயம், ஓ.என்.ஜி.சி., செயில், விப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 21.56 புள்ளிகள் அதிகரித்து, 17,752.68 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,001.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,677.97 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 9.70 புள்ளிகள் உயர்ந்து, 5,385.20 புள்ளிகளில் நிலைகொண்டது. 

ஓ.என்.ஜி.சி., பங்கு வெளியீடு குறைந்தபட்ச விலை ரூ.290



புதுடில்லி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஏல முறையிலான பங்கு வெளியீடு இன்று நடைபெறுகிறது. ஒரு பங்கின் அடிப்படை விலை 290 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 9.15 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை பங்குகள் ஏலம் விடப்படும்.
பங்குச் சந்தையின் சாதகமற்ற சூழல் காரணமாக, ஓ.என்.ஜி.சி.ன் பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடம் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்தது. இதையடுத்து, சென்ற ஆண்டு இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.இதையடுத்து, பங்குச்சந்தையில், நிறுவனர்கள் ஏலம் மூலம் பங்கு விற்பனை மேற்கொள்ளும் புதிய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முதன் முறையாக, ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ஏல முறையில் பங்கு விற்பனை மேற்கொள்கிறது.
இந்த ஏலம் வாயிலாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 42.77 கோடி பங்குகளை விற்பனை செய்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஏலத்தில், சில்லரை முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள், ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். அவர்கள் குறிப்பிடும் விலையில், தேவைப்படும் பங்குகள் இருக்கும் பட்சத்தில், அந்த தொகைக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

Wednesday, February 29, 2012

ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.56 புள்ளிகள் அதிகரித்து 17752.68 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.70 புள்ளிகள் அதிகரித்து 5385.20 புள்ளிகளோடு காணப் பட்டது. ரிலையன்ஸ் இண்டர்டீஸ், பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், விப்ரோ, டாடா பவர், ஸ்டெர்லைஸ் இண்டர்டீஸ் ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. சர்வதேச சந்தையில் ஏற்றப்பட்ட ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் துவங்கியுள்ளது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 268.95 புள்ளிகள் அதிகரித்து 18000.07 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 81.25 புள்ளிகள் அதிகரித்து 5456.75 புள்ளிகளோடு காணப் பட்டது. இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மீண்டும் 18000 புள்ளிகளை எட்டியுள்ளது. இது பங்கு முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 16 காசுகள் உயர்ந்து 48.91 ஆக இருந்தது.

உலக சந்தையில் எண்ணெய்யின் விலை பாரியளவில் அதிகரிப்பு



உலக சந்தையில் எண்ணெய்யின் விலை கடந்த ஜுலை மாதத்தின் பின்னர் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பொருளாதாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஈரானின் அணுத்திட்ட சர்ச்சைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உலகின் ஐந்தாவது எண்ணெய் உற்பத்தி நாடாக ஈரான் விளங்குகின்றது.

இந்த நிலையில் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை சில நாடுகள் நிறுத்தியுள்ளதுடன், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தப்போவதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது
.

"சென்செக்ஸ்' 285 புள்ளிகள் உயர்வு"



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்க்கிழமையன்று நன்கு இருந்தது. திங்கள்கிழமையன்று வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில், 2.5 சதவீதம் சரிவைக் கண்டது. இந் நிலையில், நேற்றைய வர்த்தகம் 1.6 சதவீத அள விற்கு ஏற்றம் கண்டது.
சர்வதேச நிலவரங்களுக்கிடையிலும், சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, நேற்றைய வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததை யடுத்து, இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் முன்னேற்றம் கண்டது. 
இது தவிர, நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், இரண்டாவது திட்டத்திற்கு, கிரீஸ் பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்,வங்கி, ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம், மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், 3 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருந்தது. 
இருப்பினும், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, டி.சி.எஸ்., விப்ரோ, மற்றும் மருந்து துறையைச் சேர்ந்த சன் பார்மா உள்ளிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,வர்த்தகம் முடியும் போது,285.37 புள்ளிகள் அதிகரித்து,17,731.12 புள்ளி களில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17, 776.82 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,530.44 புள்ளிகள் வரையிலும் சென்றது. 
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 94.30 புள்ளிகள் உயர்ந்து, 5,375.50 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,391.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,306.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Tuesday, February 28, 2012

நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கைக்கான கடன் அங்கீகாரம்




இலங்கை மின்சாரசபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன நட்டமடையாத நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இலங்கைக்கான கடனை அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி கொஷி மாதாய், பிஸ் பெஸ்டிற்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற்றுக் கொள்வதற்காக செய்துகொண்ட உடன்படிக்கைகள் காரணமாகவே இலங்கையில் வட்டி வீதமும் நாணயமாற்று வீதமும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்துகின்றன.

அதன் காரணமாகவே எரிபொருட்களின் விலையும் மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அரசாங்கம் மீது குற்றம்சுமத்திவருகின்றன.

இந்த விடயம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி ஹொசியிடம் வினவினோம்.

அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ள கடன்சார் செயற்திட்டங்களின் பிரகாரம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும், மின்சாரசபையையும் நட்டமடையாத நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்பது அதன் நிபந்தனைகளுல் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதனை செயற்படுத்துகையில் பாரியளவில் எரிபொருட்களின் விலை அதிகரித்தால், சந்தை நிலவரத்திற்கமைய அதனை முகாமைத்துவம் செய்வதற்கான திட்டமொன்று இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தினால் அந்த செலவுகளை தாங்கிக் கொள்ள முடியாது என்பதுடன் மறுபுறத்தில் இவ்வாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் செயற்படுமாயின், அரசாங்கம் பாரிய நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என்று கொஷி மாதாய் தெரிவித்தார்.

அந்த நிதியை திரட்டிக் கொள்வதற்கு மேலும் பணம் அச்சிட வேண்டியேற்படும் என்றும் இதன்போது பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி குறிப்பிட்டார்.

கடன்பெற முயற்சிக்கும் பட்சத்தில் வட்டி வீதம் அதிகரிக்கலாம் எனக் குறிப்பிட்ட கொஷி மாதாய், அரசாங்கத்திற்கு மாற்று வழி இல்லாத நிலையில் செலவுகளை ஈடு செய்யக்கூடிய விலையையாவது நிர்ணயிக்க வேண்டியேற்படும் என மேலும் கூறினார்
.

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.05 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.63 புள்ளிகள் அதிகரித்து 17568.38 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 19.35 புள்ளிகள் அதிகரித்து 5300.55 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று பெரும் சரிவைச் சந்தித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு காணப்படாததால், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது.

சென்செக்ஸ்' 478 புள்ளிகள் வீழ்ச்சி



மும்பை நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று பெரும் சரிவைச் சந்தித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு காணப்படாததால், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது.
இந்நிலையில், சர்வதேச நிலவரங்கள், உத்தரபிரதேச மாநில தேர்தல் போன்றவற்றால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இது தவிர, லாப நோக்கம் கருதி அதிக எண்ணிக்கையில், பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் விலை மிகவும் குறைந்து போனது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர் பொருள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை இருந்தது. அதேசமயம், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், வங்கி, பொறியியல், உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 477.82 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,445.75 புள்ளிகளில் நிலைபெற்றது. 
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,975.19 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,381.64 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.டி.சி., மற்றும் சன்பார்மா ஆகிய இரு நிறுவனப் பங்குகளை தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 148.10 புள்ளிகள் சரிவடைந்து, 5,281.20 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,449.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,268.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Monday, February 27, 2012

478 புள்ளிகள் சரிவில் முடிந்தது சென்செக்ஸ்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று இறக்கத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 477.82 புள்ளிகள் குறைந்து 17445.75 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 148.10 புள்ளிகள் குறைந்து 5281.20 புள்ளிகளோடு காணப் பட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், எல் அண்ட் டி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ, இன்போசிஸ், ஹச்டீஎஃப்சி, டிசிஎஸ் ஆகியவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன.

Sunday, February 26, 2012

ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்ய சந்தர்ப்பம்




சமாதானம் மலர்ந்துள்ள இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பம் ஜப்பான்
 முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.


இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானின் விசேட பௌத்த தூதுக் குழுவினருடன் இன்று முற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.


இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் பொருளாதார மலர்ச்சியால் வலுவான எதிர்கால பயணத்திற்குள் பிரவேசித்துள்ள இலங்கையை, விரைவில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 
வருடங்கள் பூர்த்தியாகும் இத்தருணத்தில் நீண்டகால நட்பு தொடர்பாகவும் ஜனாதிபதி நினைவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாம் நீண்டகாலமாக இலங்கைக்கு வருகைதர எதிர்பார்த்திருந்ததாக ஜப்பானின் விசேட பெளத்த தூதுக்குழுவிற்கு தலைமைதாங்கும் காங்கோஜி விஹாரையின் விஹாராதிபதி சுஜிமுரா தய்சென் தேரர் கூறியுள்ளார்.


இந்த சந்திப்பை அடுத்து அலரி மாளிகை வளாகத்தில் நடப்பட்டுள்ள ஜய ஸ்ரீ மாபோதி முன்பாக தேரர்கள் ஜனாதிபதிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் ஆசி வழங்கினர்.

அதிக ஏற்ற, இறக்கத்தில் நாட்டின் பங்கு வர்த்தகம்



மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்ற திங்களன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. ஆக, நான்கு நாட்கள் நடைபெற்ற பங்குவியாபாரத்தில், செவ்வாய் தவிர்த்த, ஏனைய மூன்று வர்த்தக தினங்களில், பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்ததுடன், ஒட்டுமொத்த அளவில், சுணக்கம் கண்டது.
நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் இதுவரையிலுமாக, பங்கு வர்த்தகம் ஏறுமுகமாகத்தான் இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.
பொதுவாக, தங்கம், வைரம், வீடு, மனை, கட்டில், பீரோ போன்றவற்றின் விலை குறையும்போது தான், அவற்றை வாங்குவர். ஆனால், பங்கு வர்த்தகத்தில் மட்டும்தான், பங்குகளின் விலை உயரும் போது, அதை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். கடந்த இரண்டு மாதங்களாக சந்தையில் இதுதான் நடக்கிறது.
சந்தை இறக்கத்திற்கு காரணம் : சமீப காலமாக, ஈரான் பிரச்னையால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது, பங்குச் சந்தையில் ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை கூடுவதால், இதர பொருட்களின் விலையும் கூடும். 
இதனால், நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும். அது பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலை உயர்வால், உள்நாட்டில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர வாய்ப்புள்ளது.
வெள்ளியன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 155 புள்ளிகள் சரிவடைந்து, 17,923 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 54 புள்ளிகள் குறைந்து, 5,429 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. நடப்பு வாரத்தில் மட்டும், "சென்செக்ஸ்' 366 புள்ளிகள் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டி விகிதம் : கடன் மற்றும் டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் இன்னும் குறையவில்லை. இது, ஒரு பெரிய குறைதான். பல வங்கிகளும், தனியார் நிறுவனங்களும், டிபாசிட்டிற்கு, 10 சதவீதத்திற்கும் அதிகமாக வட்டி வழங்கி வருகின்றன. இது, சந்தையில் பணப்புழக்கம், குறைவாக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. ரிசர்வ் வங்கி, வரும் மார்ச் மாதத்தில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் அல்லது ரொக்க இருப்பு விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. எனவே, டிபாசிட் செய்ய விரும்புவர்களுக்கு, தற்போதைய சூழ்நிலை சாதகமானதாகும். ஏனெனில், டிபாசிட்டிற்கு 11 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.
புதிய வெளியீடுகள் : முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்.) நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, முதலீட்டாளர்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதன் பங்குகள் வேண்டி, 54 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. 
குறிப்பாக, சிறிய முதலீட்டாளர்களிடமிருந்து, 24 மடங்கிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 2 லட்சம் ரூபாய்க்கு பங்குகள் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, குறைந்த அளவிற்கே பங்குகள் கிடைக்கும். ஒரு பங்கில், 500 ரூபாய் லாபம் கிடைப்பதாகக் கொண்டால், 3,000 ரூபாய் வரையில் தான் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
எம்.சி.எக்ஸ்.சின் பங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, மேலும் பல நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் களம் இறங்கக்கூடும். நல்ல வெளியீடுகளாகப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிடில், இழப்பு ஏற்படும்.
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள, ஓ.என்.ஜி.சி. நிறுவனமும், பங்கு வெளியீட்டில் களமிறங்க வாய்ப்புள்ளது. தற்போது, பங்குச் சந்தை நன்கு உள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, பொதுத் துறை நிறுவனங்களும் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ளக் கூடும்.
சிட்டி பேங்க் : சிட்டி பேங்க், எச்.டீ.எப்.சி., நிறுவனத்தில் கொண்டிருந்த, 10.92 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 7,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. ஆறு வருடங்களுக்கு முன்பு, 3,000 கோடி ரூபாய் அளவிற்கு மேற்கொண்ட முதலீடு, இன்று 10,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை : தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் விலை உயர்ந்துள்ளது. இதற்கு, சீன நாடு அதிக அளவில் தங்கம் வாங்குவது தான் காரணம். இதுநாள் வரை, உலக அளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், சென்ற காலாண்டில், தங்கம் வாங்குவதில், சீனா, இந்தியாவை விஞ்சியுள்ளது. 
மேலும், அமெரிக்கா அதன் பொருளாதார மேம்பாட்டிற்காக, புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
வரும் வாரம் எப்படி இருக்கும்? : எம்.சி.எக்ஸ். நிறுவனத்தின் புதிய வெளியீட்டில் பங்குகள் வேண்டி 54 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான தொகை முடக்கப்பட்டுள்ளது. மிக அதிக அளவிலான தொகை ஒரு நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில் குவிக்கப்பட்டுள்ளது. இதன் பங்குகள், பங்குச் சந்தையில், பட்டியலிடப்படும்போது, எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர். வரும் வாரத்தில், பங்கு வர்த்தகத்தில், அதிக ஏற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அதிக அளவில் இறக்கம் இருக்காது எனலாம்.
- சேதுராமன் சாத்தப்பன் -

Saturday, February 25, 2012

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் மீண்டும் 18,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவு



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து, மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை யன்றும் சரிவுடன் முடிவடைந்தது. அமெரிக்காவில், பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. ஆனால், லாப நோக்கம் கருதி அதிக எண்ணிக்கையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகளில் பல துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்துபோனது.மேலும், ஈரான் பிரச்னையால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்,பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் உள்ளிட்டத் துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. அதேசமயம், ஸ்@டட் @பங்க் ஆப் இந்தியா, டீ.எல்.எப்., எச்.டீ.எப்.சி., மற்றும் எல் அண்டு டி ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை மிகவும்சரிவடைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 18,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது. அதாவது, 154.93 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,923.57 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,198.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,848.93 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 54 புள்ளிகள் சரிவடைந்து, 5,429.30 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,521.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,405.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Friday, February 24, 2012

சரிவுடன் முடிந்தது வர்த்தகம்



மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 154.93 புள்ளிகள் குறைந்து 17923.57 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 54.00 புள்ளிகள் குறைந்து 5429.30 புள்ளிகளோடு காணப் பட்டது. வங்கிகள், கபிடல் குட்ஸ், எண்ணெய் மற்றும் காஸ் ஆகியவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன. 2012ல் முதல் முறையாக இந்த வாரம் பங்குச்சந்தை ‌மோசமான நிலையில் முடிந்துள்ளது. கடந்த 6 வாரங்களில் இல்லாத அளவிற்கு பங்குச்சந்தை சரிந்துள்ளது.

ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்



மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.09 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.51 புள்ளிகள் அதிகரித்து 18079.01 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 4.15 புள்ளிகள் குறைந்து 5479.15 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மந்தமாக இருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இல்லாததால், இந்திய பங்குச் சந்தைகளிலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இந்நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஓரளவிற்கு சூடுபிடித்திருந்தது. ஆனால், இது இந்தியப் பங்குச் சந்தைகளில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், உலோகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. இருப்பினும், எரிசக்தி, மின்சாரம், நுகர் பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.

சென்செக்ஸ்' 67 புள்ளிகள் சரிவு



மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மந்தமாக இருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இல்லாததால், இந்திய பங்குச் சந்தைகளிலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இந்நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஓரளவிற்கு சூடுபிடித்திருந்தது. ஆனால், இது இந்தியப் பங்குச் சந்தைகளில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், உலோகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. இருப்பினும், எரிசக்தி, மின்சாரம், நுகர் பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 66.75 புள்ளிகள் சரிவடைந்து, 18,078.50 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,249.53 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,005.28 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 12 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 12 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 22.05 புள்ளிகள் குறைந்து, 5,483.30 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,537.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,460.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.