Saturday, February 25, 2012

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் மீண்டும் 18,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவு



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து, மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை யன்றும் சரிவுடன் முடிவடைந்தது. அமெரிக்காவில், பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. ஆனால், லாப நோக்கம் கருதி அதிக எண்ணிக்கையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகளில் பல துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்துபோனது.மேலும், ஈரான் பிரச்னையால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்,பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் உள்ளிட்டத் துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. அதேசமயம், ஸ்@டட் @பங்க் ஆப் இந்தியா, டீ.எல்.எப்., எச்.டீ.எப்.சி., மற்றும் எல் அண்டு டி ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை மிகவும்சரிவடைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 18,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது. அதாவது, 154.93 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,923.57 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,198.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,848.93 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 54 புள்ளிகள் சரிவடைந்து, 5,429.30 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,521.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,405.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.