Thursday, February 16, 2012

சரிவுடன் தொடங்கியது வர்த்தகம்



                இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.12 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 54.87 புள்ளிகள் குறைந்து 18147.54 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 18.55 புள்ளிகள் குறைந்து 5513.40 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. குறிப்பாக, கிரீஸ் நாடு, செலவினங்களை குறைத்து, மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளதால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு... "சென்செக்ஸ்' 18,000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு...



              இந்திய நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
குறிப்பாக, கிரீஸ் நாடு, செலவினங்களை குறைத்து, மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளதால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இந்நிலையில், நாட்டின் பொதுப் பணவீக்கம் குறைந்துள்ளதையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நிலைப்பாட்டால், வங்கி துறை பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மேலும், தனியார், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, நிலக்கரி அளிக்கும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால், மின்சாரத் துறை நிறுவனப் பங்குகளுக்கும் தேவை அதிகரித்தது.
மேற்கண்ட துறைகள் தவிர, மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்திருந்தது. அதேசமயம், மருந்து, நுகர் பொருட்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.
கிருஷ்ணா கோதாவரி படுகையில், எரிவாயு உற்பத்தி குறையும் என்ற செய்தியால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கின் விலை குறைந்து போனது.பங்கு வர்த்தகம் குறித்து, மும்பை பங்குச் சந்தை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:
இந்தியாவில் பங்கு வர்த்தகம், விரைவான வேகத்தில் உயர்ந்து வருகிறது. நடப்பு 2012ம் ஆண்டில், இதுவரையிலுமாக, "சென்செக்ஸ்' 17.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு, "சென்செக்ஸ்'மீண்டும் 18,000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. என@வ, சிறிய முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.
ஏனெனில், பல நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் உயர்ந்துள்ளதை சாதகமாக பயன்படுத்தி, வர்த்தகர்கள் பங்குகளை விற்கும் நிலையில், எந்த ஒரு சூழ்நிலையிலும், பங்கு வியாபாரத்தில் பின்னடைவு ஏற்படக் கூடும். அது, சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களை வெகுவாக பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 353.84 புள்ளிகள் அதிகரித்து, 18,202.41 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,231.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,000.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சிப்லா, இந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளை தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 114 புள்ளிகள் உயர்ந்து, 5,531.95 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,542.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,460.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.