Thursday, March 1, 2012

169 புள்ளிகள் சரிவில் முடிந்தது சென்செக்ஸ்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கிய சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 168.71 புள்ளிகள் குறைந்து 17583.97 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 45.45 புள்ளிகள் குறைந்து 5339.75 புள்ளிகளோடு காணப் பட்டது. கபிடல் குட்ஸ், வங்கி, எண்ணெய், காஸ், ஆட்டோ மற்றும் மெட்டல் ஆகி‌யவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன.

சரிவுடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.13 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51.56 புள்ளிகள் குறைந்து 17752.68 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.70 புள்ளிகள் குறைந்து 5385.20 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 20 காசுகள் குறைந்து 49.21 ஆக இருந்தது.

"சென்செக்ஸ்" 22 புள்ளிகள் உயர்வு "சென்செக்ஸ்' 22 புள்ளிகள் உயர்வு



மும்பை நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது என்ற செய்தியால், 18,000 புள்ளிகளை கடந்து ஏற்றத்தில் சென்று கொண்டிருந்த பங்கு வர்த்தகம், மதியத்திற்கு பிறகு 250 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. இருப்பினும், வர்த்தகம் முடியும் போது, ஓர் அளவிற்கு முன்னேற்றம் கண்டது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், வங்கி, நுகர் பொருள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. அதேசமயம், ஓ.என்.ஜி.சி., செயில், விப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 21.56 புள்ளிகள் அதிகரித்து, 17,752.68 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,001.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,677.97 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 9.70 புள்ளிகள் உயர்ந்து, 5,385.20 புள்ளிகளில் நிலைகொண்டது. 

ஓ.என்.ஜி.சி., பங்கு வெளியீடு குறைந்தபட்ச விலை ரூ.290



புதுடில்லி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஏல முறையிலான பங்கு வெளியீடு இன்று நடைபெறுகிறது. ஒரு பங்கின் அடிப்படை விலை 290 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 9.15 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை பங்குகள் ஏலம் விடப்படும்.
பங்குச் சந்தையின் சாதகமற்ற சூழல் காரணமாக, ஓ.என்.ஜி.சி.ன் பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடம் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்தது. இதையடுத்து, சென்ற ஆண்டு இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.இதையடுத்து, பங்குச்சந்தையில், நிறுவனர்கள் ஏலம் மூலம் பங்கு விற்பனை மேற்கொள்ளும் புதிய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முதன் முறையாக, ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ஏல முறையில் பங்கு விற்பனை மேற்கொள்கிறது.
இந்த ஏலம் வாயிலாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 42.77 கோடி பங்குகளை விற்பனை செய்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஏலத்தில், சில்லரை முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள், ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். அவர்கள் குறிப்பிடும் விலையில், தேவைப்படும் பங்குகள் இருக்கும் பட்சத்தில், அந்த தொகைக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.