Friday, February 17, 2012

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



மும்பை இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.04 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 168.13 புள்ளிகள் அதிகரித்து 18313.16 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 38.20 புள்ளிகள் அதிகரித்து 5560.15 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான, இரண்டாவது திட்டத்திற்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தது.இது தவிர, சீனாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு சென்ற ஜனவரி மாதத்திலும் சரிவடைந்துள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கம் கண்டது.

சென்செக்ஸ்' 48 புள்ளிகள் குறைவு

 


மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான, இரண்டாவது திட்டத்திற்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தது.இது தவிர, சீனாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு சென்ற ஜனவரி மாதத்திலும் சரிவடைந்துள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கம் கண்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. குறிப்பாக, கோல் இந்தியா, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்தது. அதேசமயம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், பொறியியல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.அதேசமயம் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 48.42 புள்ளிகள் சரிவடைந்து, 18,153.99 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,182.78 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,043.32 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 10 புள்ளிகள் குறைந்து, 5,521.95 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,531.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,483.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.