பொன் (Gold) தொடர்பிலான தகவல்..............

ஒரு அவுண்ஸ் தங்கத்தில் 5 மைகிரோன் தடிப்புள்ளதும் 80 கிலோமீற்றர் நீளமுள்ளதுமான இழை செய்யமுடியுமாம்!. அதாவது தங்கம் அழகானது மட்டுமல்ல கூடவே மிகவும் பலமானது. இத்தகைய சிறப்புமிக்க வலுவானதும் வளைந்து கொடுக்கக் கூடியதுமான உலோகம் பொன் தொடர்பிலான தகவல் பின்வருமாறு உள்ளதனை காணலாம்.

                உலகில் இருக்கக்கூடிய உலோகங்களில் அரிதானது , அழகானது , மின்கடத்தி , வலிமையானது , இலகுவில் உடைந்து போகாமல் மிகவும் வளைந்து கொடுக்கக் கூடியது எனும் பலகுண அம்சங்களினைக் கொண்டது என்ற சிறப்புக்குரிய உலோகம் பொன் அல்லது தங்கம்ஆகும். தங்க உலோகத்தினை விடவும் பிளாற்றினம் எனும் உலோகம் மிகவும் அரிதாகவும் விலைமதிப்பாகவும் உள்ள போதிலும் மனிதர்களால் மிகவும் விரும்பப்படும் வர்ணம் பொன்னின் துலங்கும் மஞ்சளாகவும் உள்ளது. மேலும் தங்கத்தின் தனிச்சிறப்பாகிய அதிவலிமை , அதிகம் வளைந்து கொடுக்கும் தன்மை காரணமாக ஆபரண உற்பத்தியில் அதிகம் விரும்பப்படும் உலோகமாக தங்கம் முதல் இடம்பிடித்துள்ளது.
தங்கமானது இயற்கையில் ஆற்று படுக்கைகளிலும் பாறைகளின் , நிலத்தின் அடிபகுதியிலும் கனிமங்களாக (Ore) காணப்படுகின்றது. உலகில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கிலான தங்கச்சுரங்கங்களில் பெரும்பாலானவை தென்னாபிரிக்காவில் இருப்பதுடன் இந்த நாடு தங்க உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கின்றது. தென்னாபிரிக்கா தவிர அமெரிக்கா அவுஸ்ரேலிய நாடுகளும் தங்க உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றன. பண்டயகாலத்திலிருந்து தங்கத்தின் பாவனை இருந்துவருகின்ற போதிலும் அறுதியான தொடக்ககாலம் இதற்கு இன்னும் சொல்லப் படவில்லை. கிறிஸ்தவர்களின் புனித நூலாகிய பைபிளின் (Bible) பலவரிகளில் தங்கம் (பொன்) பற்றிய சொல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. பழங்கால மக்களினால் பணத்தின் மாற்றீடாக நெடும் காலமாக தங்க உலோகம் பாவிக்கப்பட்டதற்கு பல வரலாற்று ஆவணங்கள் உண்டு. மேலும் இன்றய காலத்திலும் கூட தங்கமானது ஏதோ ஒரு விதத்தில் பணத்தின் வலுவினை நிர்ணயிப்பதாகவுள்ளது.

                  இரசாயன தாக்கம் எதிலும் இலகுவில் தாக்கப்படாத உலோகமாகிய பொன்னின் இராசயன குறியீடு Au ஆக உள்ளது. ஆரம்ப காலத்தில் Aurum எனும் இலத்தீன் சொல்லினால் (latin word) மிகவும் அரிதானது எனும் அர்த்தம்பட Gold (பொன்) அழைக்கப்பட்டது. மேலும் இந்த அர்த்தம் பட உருவானதுதான் ஆஜண்டீன (Argetina) எனும் தென்னமெரிக்க நாட்டின் பெயர் ஆகும். இத்தனை சிறப்பு மிக்க தன்மைகளுக்கு இரசாயன தாக்கம் மூலமாக மங்காததும் துருப்பிடிக்காததுமான தங்கத்தின் தன்மைகளும் சிறந்த காரணங்களாகும். அத்துடன் இராசாயன பரிசோதனை மூலமாக நிரூபிக்கப்பட்ட தங்க உலோகத்தின் முக்கிய தரவுகள் கீழ் வருமாறு நியமமாக உள்ளதனையும் காணலாம்.
  • தங்கத்தின் (Au) உருகுநிலை = 1064.43 பாகை சென்ரிகிரேட் (1064.43 0C).
  • Au கொதிநிலை = 2850 பாகை சென்ரிகிரேட் (2850 0C).
  • Au இலத்திரன் எண்ணிக்கை = 79
  • Au நியூத்திரன் எண்ணிக்கை = 118
  • Au அடர்த்தி = 19.93 கிராம்/கன சென்ரி மீற்றர்.
  • Au உலோகத்தின் நிறம் = பசும் மஞ்சள்.

தங்கத்தின் உபயோகம் இயந்திரவியல் , மினியல் , இலத்திரனியல் , ஆபரணம் உட்பட பலவித புழக்கத்துடன் நாளாந்தம் தங்கம் பின்னிப் பிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனிதனின் நாகரீகத்துடன் தங்கமும் முக்கிய பங்குவகிக்கின்றது. (இன்றய) நாளாந்த மனித வாழ்வியலுடன் தங்கம் ஒன்றி கலந்து விடுமளவிற்கு அதன் முக்கியத்துவம் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவருகின்ற போதிலும் கரற் "carat" or "karat"  எனும் நியம அளவில் தெளிவின்மை பலரிடம் இருந்து வருகின்றது. அதாவது தூய்மையான தங்கம் 24 கரற் (karatage) எனும் நியம அளவினால் கூறப்படுகின்றது. இந்த தூய வடிவிலான (24k) ஆபரணங்கள் மிகவும் மென்மை காரணமாக இலகுவில் நெளிவது காரணமாக பிற உலோகங்கள் சேர்க்கப் படுகின்றது. கலப்பு உலோகங்களாக வெள்ளி , செம்பு , நாகம் , பலடியம் என்பன சேர்க்கப்படுகின்ற விகிதத்தினை பொறுத்து 24k , 22k ,18k , 14k , 12k , 9k கீழ் வருமாறு விரிவாக உள்ளதினையும் காணலாம்.
அதாவது 18k என்பது (24k =18k+6k) 18 பகுதி தங்கமும் 6பகுதி பிற உலோகங்கள் கலப்பும்கொண்டது (75% தங்கம்).
இதேபோல் மற்றய விகிதங்களும் வருமாறு உள்ளதினை காணலாம்.
  • 24k = (24k-0) = 100% Au
  • 22k = (24k-2k) = 91.7% Au
  • 18k = (24k-6k) = 75% Au
  • 14k = (24k-10k) = 58.3% Au
  • 12k = (24k-12k) = 50% Au
  • 9k = (24k-15k ) = 37.5% Au
                மேலும் பலர் வெண் தங்கம் (white gold) பற்றி அறிந்திருக்கலாம். ஆனால் வெண் தங்கம் என்பது பிளற்றின உலோகத்தின் குடும்பத்தினைச் சேர்ந்த ரொகோடியம் (rhodium) உலோகத்தினால் முலாம் இடப்படுவதாகும். அதாவது வெண் தங்க ஆபரணங்கள் காலப்போக்கில் பாவனை காரணமாக அதன் யொலிப்பினை இழக்கும் என்பது தெளிவு. எனவே வெண் தங்க ஆபரணங்களுக்கு பதில் பிளற்றின உலோகத்தில் ஆபரணங்களை செய்வது சிறந்தது. இத்தனை முக்கியத்துவமும் மதிப்புமுள்ள தங்கத்தினை ஆராச்சி செய்பவர்களும் விட்டுவைப்பதில்லை. அருகிலுள்ள படத்தில் ஆய்வு கூடத்தில் செயற்கையில் வளர்க்கப்பட்ட தங்கத்தின் மூலக்கூறுகளை காணலாம். இவை தவிர தற்போது உலக சந்தையில் 100 கிராம் தங்கம்2200 டொலரின் மேலாக விலை போகின்ற செய்தியானது அதன் அருமை பெருமைகளை எடுத்து வலியுறுத்த வல்லது.

குறிப்பு 1: 
                    ஸ்பானிய நாட்டில் குகையில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தினாலான பழைமையான பொருள் (உபகரணம்) செய்யப்பட்ட காலம் கி.மு 40,000 வருடம் என கணிப்பிடப் பட்டுள்ளது. இதிலிருந்து தங்கம் மனிதனால் பாவிக்கத் தொடங்கிய காலம் அறுதியிட்டு சொல்லமுடியாது இருப்பதனை அறியமுடியும்.

குறிப்பு 2: 
                     பிரித்தானயாவின் தலைநகர் லண்டனில் முதல்முதலில் தங்கமானது வர்த்தகரீதியில் 1919 ம் வருடத்திலிருந்து விலை நிர்ணயமாகி சர்வதேசரீதியல் விற்பனைக்கு வந்தது. தூய்மையான 99.99% தங்கம் புலிஜன் (bullion) என (படம்) அழைக்கப் படுகின்றது. உலக பங்குச்சந்தை வர்த்தகத்தில் தங்கம் XAU எனும் குறியீட்டினால் ISO இனால் வரையறுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.