Saturday, March 3, 2012

ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது இன்றைய சிறப்பு வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தையின் இன்றைய சிறப்பு வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது. வர்த்தக நேரம் முடிவின் ‌போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.52 புள்ளிகள் குறைந்து 17622.28 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.05 புள்ளிகள் அதிகரித்து 5359.40 புள்ளிகளோடு காணப் பட்டது. இன்போசிஸ், ஐடிசி, ஐசிஐசிஐ, ஹச்டிஎஃப்சி மற்றும் டிசிஎஸ் ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.

திருகோணமலையில் ஆறு நெற்களஞ்சியசாலைகள்



திருகோணமலை மாவட்டத்தில் ஆறு நெற்களஞ்சியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

19.9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த களஞ்சியசாலைகளில், கந்தளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இருந்து கொள்வனவு செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட 80 வீடுகளைக் கொண்ட நெல்சன்புர வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்ற

இன்றைய சிறப்பு வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கியது



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் ஐந்து நாட்கள் மட்டும் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று சனிக்கிழமை சிறப்பு வர்த்தகம் நடைபெறுகிறது. இன்று வர்த்தக நேர துவங்கிய 10 நிமிடங்களிலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34.60 புள்ளிகள் அதிகரித்து 17671 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 4.55 புள்ளிகள் அதிகரித்து 5363.90 புள்ளிகளோடு காணப் பட்டது. முதல் 10 நிமிடங்களிலேயே பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் காணப்பட்டது பங்கு முதலீட்டாளர்களிடையே உச்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"சென்செக்ஸ்" 53 புள்ளிகள் அதிகரிப்பு



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.குறிப்பாக, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்ற செய்தியால், அந்நாட்டிலும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளின், நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, இந்நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் வழங்கியதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, ஆரோக்ய பராமரிப்பு, பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 52.83 புள்ளிகள் அதிகரித்து, 17,636.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,731.88 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,504.38 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 19.60 புள்ளிகள் உயர்ந்து, 5,359.35 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,392.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,315.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Friday, March 2, 2012

ஏற்றத்துடன் முடிநதது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் அதிகளவில் காணப்பட்டன. வர்த்தக முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32.40 புள்ளிகள் அதிகரித்து 17616.37 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.35 புள்ளிகள் அதிகரித்து 5354.10 புள்ளிகளோடு காணப் பட்டது. ரிலையன்ஸ் இண்டர்டீஸ், லார்சன், ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஹச்டிஎஃப்சி, மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல், என்டிபிசி, டாடா ஸ்டீல் மற்றும் விப்ரோ ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. 

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.15 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43.61 புள்ளிகள் அதிகரித்து 17627.58 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.45 புள்ளிகள் அதிகரித்து 5348.20 புள்ளிகளோடு காணப் பட்டது. ஏற்றத்தில் காணப்பட்ட வர்த்தகம் சிறிது நேரத்தி‌லேயே சரிந்து காணப்பட்டது. 9.29 மணியளவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 44.53 புள்ளிகள் குறைந்து 17535.03 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.60 புள்ளிகள் குறைந்து 5325.15 

மசகு எண்ணெய்க்கான கொடுப்பனவுகளைத் தங்கமாகப் பெற்றுக்கொள்ள ஈரான் இணக்கம்



மசகு எண்ணெய்கான கொடுப்பனவுகளை தங்கமாகப் பெற்றுக்கொள்ள ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளது.

அணுத்திட்ட சர்ச்சை காரணமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஈரான் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு எதிராகத் தடைகளை விதித்துள்ளன.

இதன்காரணமாக கொள்வனவு செய்யும் மசகு எண்ணெய்கான கொடுப்பனவுகளை ஈரான் வங்கிகளுக்கு செலுத்துவதில் வாடிக்கையாளர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

தடைகளின் ஒரு கட்டமாக ஈரான் எண்ணெய் கொள்வனவை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிறுத்தவுள்ளன.

ஈரானின் 20 வீதமான மசகு எண்ணெய் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

எனினும், ஈரானின் மசகு எண்ணெய்யை பாரியளவில் கொள்வனவு செய்யும் சீனா, மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தாம் தொடர்ந்தும் எண்ணெய் இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ள

"சென்செக்ஸ்" 169 புள்ளிகள் வீழ்ச்சி



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக்கிழமை அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. உலகின் ஒரு சில பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், விமான சேவை, வங்கி, பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகனம், உரம் உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 168.71 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,583.97 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,717.53 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,463.27 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 45.45 புள்ளிகள் குறைந்து, 5,339.75 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,372.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,297.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Thursday, March 1, 2012

169 புள்ளிகள் சரிவில் முடிந்தது சென்செக்ஸ்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கிய சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 168.71 புள்ளிகள் குறைந்து 17583.97 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 45.45 புள்ளிகள் குறைந்து 5339.75 புள்ளிகளோடு காணப் பட்டது. கபிடல் குட்ஸ், வங்கி, எண்ணெய், காஸ், ஆட்டோ மற்றும் மெட்டல் ஆகி‌யவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன.

சரிவுடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.13 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51.56 புள்ளிகள் குறைந்து 17752.68 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.70 புள்ளிகள் குறைந்து 5385.20 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 20 காசுகள் குறைந்து 49.21 ஆக இருந்தது.

"சென்செக்ஸ்" 22 புள்ளிகள் உயர்வு "சென்செக்ஸ்' 22 புள்ளிகள் உயர்வு



மும்பை நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது என்ற செய்தியால், 18,000 புள்ளிகளை கடந்து ஏற்றத்தில் சென்று கொண்டிருந்த பங்கு வர்த்தகம், மதியத்திற்கு பிறகு 250 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. இருப்பினும், வர்த்தகம் முடியும் போது, ஓர் அளவிற்கு முன்னேற்றம் கண்டது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், வங்கி, நுகர் பொருள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. அதேசமயம், ஓ.என்.ஜி.சி., செயில், விப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 21.56 புள்ளிகள் அதிகரித்து, 17,752.68 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,001.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,677.97 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 9.70 புள்ளிகள் உயர்ந்து, 5,385.20 புள்ளிகளில் நிலைகொண்டது. 

ஓ.என்.ஜி.சி., பங்கு வெளியீடு குறைந்தபட்ச விலை ரூ.290



புதுடில்லி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஏல முறையிலான பங்கு வெளியீடு இன்று நடைபெறுகிறது. ஒரு பங்கின் அடிப்படை விலை 290 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 9.15 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை பங்குகள் ஏலம் விடப்படும்.
பங்குச் சந்தையின் சாதகமற்ற சூழல் காரணமாக, ஓ.என்.ஜி.சி.ன் பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடம் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்தது. இதையடுத்து, சென்ற ஆண்டு இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.இதையடுத்து, பங்குச்சந்தையில், நிறுவனர்கள் ஏலம் மூலம் பங்கு விற்பனை மேற்கொள்ளும் புதிய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முதன் முறையாக, ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ஏல முறையில் பங்கு விற்பனை மேற்கொள்கிறது.
இந்த ஏலம் வாயிலாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 42.77 கோடி பங்குகளை விற்பனை செய்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஏலத்தில், சில்லரை முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள், ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். அவர்கள் குறிப்பிடும் விலையில், தேவைப்படும் பங்குகள் இருக்கும் பட்சத்தில், அந்த தொகைக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.