Wednesday, February 29, 2012

ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.56 புள்ளிகள் அதிகரித்து 17752.68 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.70 புள்ளிகள் அதிகரித்து 5385.20 புள்ளிகளோடு காணப் பட்டது. ரிலையன்ஸ் இண்டர்டீஸ், பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், விப்ரோ, டாடா பவர், ஸ்டெர்லைஸ் இண்டர்டீஸ் ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.

ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. சர்வதேச சந்தையில் ஏற்றப்பட்ட ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் துவங்கியுள்ளது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 268.95 புள்ளிகள் அதிகரித்து 18000.07 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 81.25 புள்ளிகள் அதிகரித்து 5456.75 புள்ளிகளோடு காணப் பட்டது. இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மீண்டும் 18000 புள்ளிகளை எட்டியுள்ளது. இது பங்கு முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 16 காசுகள் உயர்ந்து 48.91 ஆக இருந்தது.

உலக சந்தையில் எண்ணெய்யின் விலை பாரியளவில் அதிகரிப்பு



உலக சந்தையில் எண்ணெய்யின் விலை கடந்த ஜுலை மாதத்தின் பின்னர் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பொருளாதாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஈரானின் அணுத்திட்ட சர்ச்சைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உலகின் ஐந்தாவது எண்ணெய் உற்பத்தி நாடாக ஈரான் விளங்குகின்றது.

இந்த நிலையில் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை சில நாடுகள் நிறுத்தியுள்ளதுடன், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தப்போவதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது
.

"சென்செக்ஸ்' 285 புள்ளிகள் உயர்வு"



மும்பை நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்க்கிழமையன்று நன்கு இருந்தது. திங்கள்கிழமையன்று வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில், 2.5 சதவீதம் சரிவைக் கண்டது. இந் நிலையில், நேற்றைய வர்த்தகம் 1.6 சதவீத அள விற்கு ஏற்றம் கண்டது.
சர்வதேச நிலவரங்களுக்கிடையிலும், சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, நேற்றைய வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததை யடுத்து, இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் முன்னேற்றம் கண்டது. 
இது தவிர, நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், இரண்டாவது திட்டத்திற்கு, கிரீஸ் பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்,வங்கி, ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம், மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், 3 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருந்தது. 
இருப்பினும், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, டி.சி.எஸ்., விப்ரோ, மற்றும் மருந்து துறையைச் சேர்ந்த சன் பார்மா உள்ளிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,வர்த்தகம் முடியும் போது,285.37 புள்ளிகள் அதிகரித்து,17,731.12 புள்ளி களில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17, 776.82 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,530.44 புள்ளிகள் வரையிலும் சென்றது. 
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 94.30 புள்ளிகள் உயர்ந்து, 5,375.50 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,391.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,306.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.