Thursday, February 16, 2012

சரிவுடன் தொடங்கியது வர்த்தகம்



                இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.12 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 54.87 புள்ளிகள் குறைந்து 18147.54 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 18.55 புள்ளிகள் குறைந்து 5513.40 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. குறிப்பாக, கிரீஸ் நாடு, செலவினங்களை குறைத்து, மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளதால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இருந்தது.