Thursday, March 1, 2012

சரிவுடன் தொடங்கியது வர்த்தகம்



 இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.13 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51.56 புள்ளிகள் குறைந்து 17752.68 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.70 புள்ளிகள் குறைந்து 5385.20 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 20 காசுகள் குறைந்து 49.21 ஆக இருந்தது.